பல்லியால் சுவரில் எவ்வாறு நடக்க முடிகிறது?
ஊர்வன இனத்தைச் சேர்ந்த பல்லிகள் குளிர் இரத்த உயிரிகள் என்பதால் உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றன.
இதில் மொத்தம் ஆறாயிரம் இனங்கள் உள்ளன. வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர் என இன்னும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன. இவற்றில் கீலா மான்ஸ்டர் அதிக விஷத்தன்மை கொண்ட பல்லியாகும்.
பல்லிகள் பாலை நிலங்களிலும், மணல் மேடுகளிலும், மரங்களிலும், புற் புதர்களிலும் வாழ்கின்றன. இவற்றை அதிகமாக எமது வீடுகளில் கண்டு கொள்ளலாம்.
வாசல், சமயலறை, சாப்பாட்டறை, களிவறை என எல்லா பகுதிகளிலும் சுவர்களில் ஓடித்திரிவதைக் காணலாம்.
குறிப்பாக பலருக்கு பல்லியால் சுவரால் எப்படி நடக்க முடிகின்றது என்ற சந்தேகம் இருக்கும்.
உண்மையில் பல்லியின் பாதங்களில் மிக நுண்ணிய மயிரிழைப் போன்ற ரோமங்கள் உண்டு. இவற்றின் உதவியால்தான் பள்ளி தரையிலும், சுவரிலும் ஏன் கண்ணாடி போன்ற வழவழப்பான பரப்பிலும் கூட நடக்க முடிகிறது.
இந்த உரோமங்கள் ஆற்றல் மிக்க நுண்ணோக்கி மூலம்தான் காண முடியும். இவற்றின் குறுக்களவு ஒரு அங்குலத்தில் லட்சத்தின் ஒரு பகுதி.
இந்த உரோமங்கள் சுவரிலும் மற்ற பரப்பிலுள்ள நுண்ணிய மேடு பள்ளங்களில் கூட பிடித்து நிற்பதற்கு பல்லியால் முடிவதற்கு இந்த உரோமங்கள் தான் காரணம்.