SIP திட்டத்தில் மாதம் ரூ1,000 முதலீடு செய்தால் ரூ.1 கோடி - எத்தனை ஆண்டுகள் தேவை?
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலரின் பணி வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ள சூழலில், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பலரும் முதலீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
SIP திட்டம்
தற்போது பலரும்முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் (SIP - Systematic Investment Plan) முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

AMFI தரவுகளின்படி, மொத்த எஸ்ஐபி சொத்து நிர்வாக மதிப்பு (AUM) ரூ.16.36 லட்சம் கோடியுடன், மொத்த பங்குச் சந்தை சார்ந்த சொத்து மதிப்பில் 28.2% ஆக உள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் 2வது மாதமாக இது நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ரூ.1,000 முதலீடு இதில் ரூ.1,000 என்ற அளவில் சிறிய தொகையுடன் கூட முதலீடு செய்ய தொடங்கினால், கூட்டு வட்டி மூலம் குறிப்பிட்ட காலத்தில் ரூ.1 கோடி அளவில் சேமிக்கலாம்.
25 வயதில் ஒருவர், ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய SIP திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்ய தொடங்கினால், அவரது 60 வயதில் சுமார் ரூ.1.14 கோடி அவரது சேமிப்பில் இருக்கும்.
5 ஆண்டு தாமதமாக 30 வயதில் SIP திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினால், 60 வயதில் ரூ.1 கோடியை பெற மாதம் ரூ.2,000 முதலீடு செய்ய வேண்டும்.
40 வயதில் தொடங்கினால் மாதம் ரூ.7500 முதலீடு செய்வதன் மூலம் 60 வயதில் ரூ.1 கோடியை பெற முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |