மின்மினிப் பூச்சிகளால் எவ்வாறு ஒளிவீச முடிகிறது?
நம்முடைய இளமைபருவத்தில் மின்மினிப் பூச்சிகளை பல்வேறு இடங்களில் பார்த்து ரசித்து இருப்போம். சில சமயங்களில் அப்பூச்சியை கையில் எடுத்து கூட, ஒளி மின்னுவதை பார்த்து வியப்பில் ஆழ்ந்து இருப்போம்.
அதுமட்டுமல்லாமல் அவை யாவும் எவ்வாறு ஒளியை உருவாக்குகிறது என்று நம்மூள் சிலபேர் தெரிந்திரிப்பீர்கள்,பலபேர் தெரிந்திருக்க மாட்டீர்கள். எனவே இப்பதிவில் மின்மினிப் பூச்சி மின்னுவதற்கான காரணங்களைப் பற்றி காண்போம்.
மின்மினிப் பூச்சிகள் முட்டையிலிருந்து வெளிவந்து லார்வாக்கள் போல இருக்கும் போதே அவை மின்ன ஆரம்பித்து விடுகின்றன.
இந்த மின்மினிப் பூச்சிகள் மின்னுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் என்னவென்றால், மின்மினிப் பூச்சியின் வயிற்றுப்பகுதியில் நடக்கும் வேதிமாற்றமாகும் (Chemical reaction). அவ்வேதிமாற்றம் எவ்வாறு நடக்கிறது என்பதை பற்றி காண்போம்.
பொதுவாக மின்மினிப் பூச்சியின் வயிற்றுப்பகுதியில் காணப்படும் என்சைம்கள் மீது ஆக்ஸிஜன் படுவதால், அதன் மூலம் ஏற்படும் வேதி மாற்றமே மின்மினிப் பூச்சி மின்னுவதற்கான முக்கியமான காரணமாகும்.
மின்மினிப் பூச்சியின் மூச்சுக்குழாய் அவற்றின் வயிற்று பகுதியில் தான் அமைந்துள்ளது. அதே போல அவற்றின் வயிற்று பகுதியில் காணப்படும் என்சைம்களான லூசிபெரேன் மற்றும் லூசிபெரேஸ் , இந்த என்சைம்கள் மீது தான் ஆக்ஸிஜன் படும்போது மின்மனிப் பூச்சி (Bio Luminous) மின்னுகின்றன.இதுவே மின்மினிப்பூச்சி மின்னுவதற்கான அறிவியல் ரீதியாக நிருபீக்கப்பட்ட உண்மை ஆகும்