மிகச்சரியாக இரத்தம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கொசுக்கள் கடிப்பது எப்படி? தப்ப வழி என்ன?
உலகில், அதிக மனித உயிர்கள் பலியாக காரணமான உயிரினம் சிங்கமோ புலியோ அல்ல. கொடிய நோய்களைப் பரப்புவதன் மூலம் மனித உயிர்களைப் பலிவாங்கும் கொசுக்கள்தான் என்கிறார் அறிவியலாளர் ஒருவர்.
இரத்தம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கொசுக்கள் கடிப்பது எப்படி?
ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? பெண் கொசுக்கள்தான் மனிதர்களைக் கடிக்கின்றன. அதற்குக் காரணம், கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு, குறிப்பாகச் சொன்னால், முட்டை உற்பத்திக்கு மனித இரத்தம் தேவை.
ஆகவேதான் அவை மனிதர்களைக் கடிக்கின்றன. இன்னொரு விடயம், கொசுக்களுக்கு ஒன்றும் கூர்மையான பார்வை கிடையாது.
அப்புறம் எப்படி அவை மிகச்சரியாக மனித உடலில் இரத்தம் ஓடும் இடத்தைக் குறிவைத்துக் கடித்து இரத்தம் குடிக்கின்றன?
அதாவது, infrared detection என்னும் செயல்முறை மூலம், மனித உடலின் வெப்பதை அறியும் திறன் கொசுக்களுக்கு உள்ளதாம்.
Aedes aegypti என்னும் ஒருவகை கொசு, டெங்கு காய்ச்சல், கிக்கன்குன்யா, சிக்கா காய்ச்சல், Mayaro மற்றும் மஞ்சள் காய்ச்சல் வைரஸ் முதலான நோய்களைப் பரப்பும் வைரஸ்களை உடலில் சுமந்து சென்று மனிதர்களுக்குப் பரப்பக்கூடிய கொசுவாகும்.
இந்த கொசுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, அவை, மனிதன் சுவாசிக்கும்போது வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடு, மனித உடலிலுள்ள ஈரப்பதம் முதலான பல விடயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது தெரியவந்துள்ளது.
அத்துடன், மனித உடலில் காணப்படும் வெப்பமும் இணைந்துகொள்ள, இந்த கொசுக்கள் எளிதாக மனித உடலில் இரத்தம் ஓடும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன.
மேலும், மனிதனுடைய தோலில் காணப்படும் வெப்பத்தைச் சுற்றிலும் இருக்கும் அகச்சிவப்புக் கதிர்கள், கார்பன் டை ஆக்சைடு மற்றும் மனித உடலிலிருந்து வீசும் வாசம் ஆகியவற்றை இரட்டிப்பாக்குவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
சுமார் 10 சென்றிமீற்றர் தொலைவில் இருக்கும்போதே நமது உடல் வெப்பத்தை அறிந்துகொள்ளும் கொசுக்கள், நம் உடல் மீது வந்து அமர்ந்ததும் உடல் வெப்பத்தை உணர்ந்துகொள்கின்றன. அதன் பின்னால் பெரிய அறிவியலே உள்ளது.
ஆக, இவ்வளவு சிறியதாக இருந்தும் அதிக அளவில் மனித உயிர்களை பலிவாங்கும் இந்த கொசுக்களிடமிருந்து தப்ப, லூசான உடை அணிவது உதவும் என்றும் கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |