Bakrid 2024 : உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை எப்படி கொண்டாடுவார்கள்?
உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகையில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும்.
இது தியாகத்தின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10ம் நாள் அன்று ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான பக்ரீத் பண்டிகை ஜூன் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. அதை எப்படி முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஏன் கொண்டாடப்படுகிறது?
நபி ஹஸ்ரத் இப்ராஹிம் முஹம்மது தனது வாழ்க்கையை எப்போதும் இறைவனுக்காக அர்ப்பணித்தவாரே செயற்பட்டு வந்தார். அவருடைய வழிபாட்டினை கடவுளும் விரும்பினார்.
ஒரு நாள் அவரை சோதிப்பதற்காக, உனது மகனை எனக்கு பலி கொடுக்குமாறு கடவுள் கேட்டுள்ளார். ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமலும் பல ஆண்டுகளுக்கு பின் பிறந்த தன் மகனை பலி கொடுக்கும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கண்ணை மூடியவாறு பலி கொடுக்கும் போது, அவனுக்காக ஆட்டுக்குட்டியை பலியிடத்தில் கடவுள் வைத்தார்.
அன்றைய நாளில் இருந்து இந்நாள் வரை ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே, பக்ரீத் தினத்தன்று இஸ்லாமியர்கள், ஆட்டை பலி கொடுக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள்.
எப்படி கொண்டாடப்படுகிறது?
தெற்காசியாவில், குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பக்ரீத் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
குடும்பங்கள் பெரும்பாலும் பல வாரங்களுக்கு முன்பே ஆட்டுக்குட்டியை வாங்கி, தியாகம் செய்யும் நாள் வரை பராமரித்து வளர்பார்கள்.
மசூதிகள் அல்லது திறந்த மைதானங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் அந்த நாளை ஆரம்பித்து, பலியிடும் சடங்கு நிகழ்கிறது.
இறைச்சி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, குடும்பத்திற்கு மூன்றில் ஒரு பங்கு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு, தேவைப்படுபவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு என பகிர்ந்துக்கொள்வார்கள்.
இறுதியாக புத்தாடை அணிந்து உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நிகழும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |