AC Gas leakage எப்படி ஆகிறது? அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
கோடை காலத்தில் அதிகமாக AC பயன்பாட்டுக்கு உள்ள நிலையில், அதில் இருந்து கேஸ் கசிவதை பற்றிய தகவலை பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் வெயில் அளவுக்கதிமாக வெளுத்து வாங்குகிறது.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
AC Gas leakage
AC -யில் Cooling வராமல் இருக்க Gas leakage ஆவதும் முக்கியமான காரணம் ஆகும். அதாவது refrigerant கசிவின் காரணமாக தான் இது நடக்கிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
AC -யில் இருக்கும் refrigerant Gas மூலமாக தான் காற்று குளிர்விக்கப்படும். இதனால், கேஸ் குறைந்தாலோ அல்லது கசிந்தாலோ அறையில் குளிர்ச்சியாக இருக்காது. AC -யில் துருப்பிடித்தால் Gas கசிவு ஏற்படும்.
அதோடு Condenser பைப்பில் காலப்போக்கில் துருபிடித்து ஏசியின் குளிர்விக்கும் திறனை வெகுவாக பாதிக்கும். இதனால், refrigerant Gas கசிவு ஏற்படும்.
மேலும், Compressor மோட்டார்களில் ஏற்படும் அதிர்வுகளால் ஏசியின் இணைப்புகள் சேதமாகும். இதனால், Gas leakage ஏற்படும். அதுமட்டுமல்லாமல், AC யை நாம் சரியான முறையில் Install செய்யாவிட்டாலும் Gas leakage ஏற்படும்.
எப்படி தடுக்கலாம்?
ஏசி உற்பத்தி நிறுவனங்களே Gas leakage ஏற்படுவதை குறைக்க போதிய நடவடிக்கைகளை எடுத்து இருந்தாலும் இது நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
* காப்பர் கண்டென்சர்கள் ஆக்சிஜன் எதிர்ப்பு திறன் இருப்பதால் இதனை நாம் தேர்வு செய்தால் துருப்பிடிக்காமல் இருக்கும். இதனால், அரிப்பு ஏற்பட்டு கேஸ் கசிவு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* ஏசியை பயன்படுத்தாத நேரத்தில் அவுட்டோர் யுனிட்டை கவர் செய்ய வேண்டும். இதனால், சேதம் அடையாமல் இருக்கும்.
* ஏசியின் பாகத்தை வெளியில் வைக்கும் போது பாதுகாப்பான இடத்தில் சிறந்த வெளியில் வைக்க வேண்டும். * ஏ.சியில் ஃபில்டர்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
* அப்படியும் AC Cooling ஆகவில்லை என்றால் ஏசி மெக்கானிக்கை அழைத்து சர்வீஸ் செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |