வானில் மின்னல் எவ்வாறு உருவாகிறது?
மின்னல் என்பது மழைமேகத்தில் நொடிப்பொழுதில் உண்டாகும் கிளைத்த தீப்பொறி போன்ற மின்பொறிக் கீற்று ஆகும். இது நிகழும்போது அதிக வெப்பமும் ஒளியும் உண்டாகும்.
இடி என்பது மின்னலின்போது உண்டாகும் மிகப்பெரிய ஒலி ஆகும்.
மின்னல் உருவாகும் விதம்
பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றானது வெப்பத்தால் சூடாகி லேசாகி மேலே செல்கிறது. குறிப்பிட்ட உயரத்தில் சூடான காற்றானது குளிர்விக்கப்பட்டு நீர்திவலைகள் கொண்ட மழைமேகங்களாக மாறுகின்றது.
அம்மழைமேகத்தின் மையப்பகுதியில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்கும். இந்நேர்வில் மழைமேகத்தின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அயனிகளாக மாற்றம் அடைகின்றன.
நேர்மின் அயனியானது எடை குறைவாக உள்ளதால் மழைமேகத்தின் மேற்பகுதியிலும், எதிர்மின் அயனியானது அதிக எடையின் காரணமான மழைமேகத்தின் அடிப்பகுதியிலும் சேகரமாகின்றன.
இவ்வாறு அயனிகளின் சேகரம் அதிகமாகும்போது அவை எதிர் எதிர் மின்சுமை உடைய அயனிகளைக் கவர்கின்றன. இவ்வாறு அயனிகளின் கவர்தல் ஏற்படும்போது மின்சாரம் உருவாகிறது. இதனையே நாம் மின்னல் என்கிறோம்.
இந்த மின்சாரம் ஒளியையும், வெப்பத்தையும் அதிகளவு வெளியிடுகின்றது.
இத்தகைய மின்சாரம் உருவாக மிகக்குறைந்த காலஅளவே ஆகிறது. அதாவது கால் நொடிக்கும் குறைவான காலஅளவு ஆகும்.