ரூ 33 லட்சம் கோடி சொத்து மதிப்பு... உலகின் பெரும் கோடீஸ்வரராக எலோன் மஸ்க் ஆனதெப்படி
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க், சமீப காலமாக தீவிரமான அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்.
எவராலும் எட்ட முடியாத
அவரை ஆதரித்தாலும் அல்லது வெறுத்தாலும், அவரைப் புறக்கணிப்பது கடினம், குறிப்பாக சமீப காலத்தில் எவராலும் எட்ட முடியாத அவரது சொத்து மதிப்பு மற்றும் அவரது அசைக்க முடியாத செல்வாக்கு.
தோராயமாக ரூ 33 லட்சம் கோடி அல்லது 400 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் வலம் வரும் அவர், தொடர்ச்சியாக சர்வதேச ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகிறார்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான அவரது புதிய நெருக்கம் அவரை உலகமெங்கும் பிரபலப்படுத்தியுள்ளது. எவராலும் எட்ட முடியாத 400 பில்லியன் சொத்து மதிப்பை எலோன் மஸ்கால் எப்படி உருவாக்க முடிந்தது.
1990களில் இணைய பக்கங்களின் ஏற்றத்தை எலோன் மஸ்க் சாதகமாக பயன்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் நிறுவனங்களை உருவாக்கி, வெற்றியும் கண்டுள்ளார். 1999ல் தான் எலோன் மஸ்க் முதல் முறையாக பெருந்தொகை ஒன்றை ஈட்டுகிறார்.
தனது சகோதரர் Kimbal உடன் உருவாக்கிய Zip2 நிறுவனத்தை 307 மில்லியன் டொலருக்கு அவர் விற்பனை செய்கிறார். இதனால் மஸ்க் மட்டும் சுமார் ரூ 1800 கோடி தொகையை சொந்தமாக்குகிறார்.
அதன் பின்னர் PayPal என்ற மிக முக்கியமான நிறுவனம் ஒன்றை நிறுவுகிறார். அது உலகமெங்கும் மக்கள் பயன்படுத்தும் ஒரு சேவையாக மாறியது. 2002ல் eBay நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் டொலருக்கு மஸ்கிடம் இருந்து PayPal நிறுவனத்தை வாங்கியது.
3,000 சதவிகிதம்
இந்த 1.5 பில்லியன் டொலர் தொகையை டெஸ்லா மற்றும் SpaceX நிறுவனங்களை உருவாக்க முதலீடு செய்கிறார். மிக விரைவிலேயே டெஸ்லா மின்சார வாகன சந்தையில் முதலிடத்தை கைப்பற்றியது, தற்போது அமெரிக்க மின்சார கார் சந்தையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.
மஸ்க்கின் சொத்து மதிப்பில் பெரும்பகுதி டெஸ்லாவில் அவர் வைத்திருக்கும் குறிப்பிடத்தக்க பங்குகளிலிருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் டெஸ்லா பங்கு விலை ராக்கெட் வேகத்தில் குதித்து 3,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
டெஸ்லாவின் 17 சதவிகித பங்குகளை மஸ்க் வைத்திருக்கிறார், இது அவரது சொத்து மதிப்பில் பெரும்பகுதிக்கு பங்களிக்கிறது. மஸ்க் அவரது சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனத்திலிருந்து ஆண்டுதோறும் சுமார் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பாதிக்கிறார்.
2022ல் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். ஆனால் அதன் மதிப்பு தற்போது கடும் சரிவடைந்து, வெறும் 9.4 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலையை எட்டியுள்ளது.
டுவிட்டரில் அதிகமாக வெளியிடப்படும் தீவிர வலதுசாரி கருத்துகளும் பொய்த்தகவல்களுமே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |