முகம் பளபளன்னு ஜொலிக்க இந்த ஒரு விதை போதும்.., இப்படி Use பண்ணுங்க
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், ஒரே நாளில் முகம் பளபளக்க ஆளி விதை ஒன்று போதும், எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
சருமத்திற்கு வழக்கமான முறையில் ஆளி விதைகளை பயன்படுத்தும் பொழுது இளமையான பொலிவு மற்றும் பளபளப்பு கிடைக்கிறது.
மேலும் ஆளி விதைகளில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களித்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது.
உடலில் உள்ள நச்சுக்கள் அகற்றப்படுவதால் சருமம் தெளிவாகி ஆரோக்கியமாகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஆளி விதைகளின் முழு பயன்களை பெறுவதற்கு அதனை டயட்டின் ஒரு பகுதியாக சேர்த்து சாப்பிடலாம்.
சாலட், ஸ்மூத்தியில் ஆளி விதைகளை தூவி சாப்பிடும் பொழுது சரும ஆரோக்கியமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது.
கூடுதலாக ஆளி விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆளி விதை எண்ணெயை சருமத்தில் தடவும் பொழுது சருமத்தில் ஏற்படும் வீக்கம் குறைகிறது.
ஆளி விதை ஃபேஷியல் எண்ணெயை சீரம், மாய்சரைசர் மற்றும் ஃபேஸ் மாஸ்குகளுடன் உபயோகிக்கலாம்.
மேலும் ஆளி விதை பொடியை தயிர் அல்லது தேனுடன் கலந்து ஸ்கிரப்பாக பயன்படுத்த அடைபட்ட சரும துளைகளை திறந்து தோல் அமைப்பை மேம்படுத்தி, தெளிவான சருமத்தை தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |