ஓரங்கட்டப்பட்ட முகேஷ் அம்பானி! சரிந்த மாபெரும் சாம்ராஜ்யம்
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி இழந்துள்ள நிலையில் கெளதன் அதானி அதை கெட்டியாக பிடித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக நீண்ட காலம் இருந்தார் முகேஷ் அம்பானி.
ஆனால் அந்த கிரீடம் தற்போது அவரிடம் இருந்து பறிபோகியுள்ளது. ஆம் தற்போது முகேஷின் சொத்து மதிப்பு 88.5 பில்லியனாக இருக்கிறது.
கடந்த பத்தாண்டில் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 21 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 3 மடங்கு (321%) மட்டுமே அதிகரித்துள்ளது.
அதே, 2013ஆம் ஆண்டில் வெறும் $2.6 பில்லியன் சொத்துபத்துக்களோடு இந்தியாவின் 15ஆவது பெரிய பணக்காரராக குஜராத்தில் சிரித்த படி வியாபாரம் செய்து கொண்டிருந்த கெளதம் அதானி, ஒருநாள் இந்தியாவின் பெரிய பில்லியனர் ஆவார் என யாரிடமாவது கூறி இருந்தால் நல்ல காமெடி என சொல்லியிருப்பார்கள்.
File Photo
ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.6 பில்லியனில் இருந்து 42 மடங்கு (4,219%) அதிகரித்து 112.3 பில்லியனைத் தொட்டுள்ளது.
ஊரே கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்தது எப்படி?
அதானி குழுமத்தில், பல வியாபாரங்கள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குச் சந்தை மூலம் அதானியின் நிறுவனங்களுக்கான மதிப்பு முழுமையாக வெளிப்படுகிறது. அது கெளதம் அதானியின் சொத்துமதிப்பிலும் எதிரொலிக்கிறது.
ceoworld
அதானி கையில் உள்ள பங்குகள்
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷன் எகனாமிக் சோன்ஸ்
அதானி ஏர்போர்ட்ஸ் ( டந்த அக்டோபர் 2021 நிலவரப்படி டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய எட்டு விமான நிலையங்கள் Public Private Partnership (PPP) முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது)
அதானி பவர் (இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல்மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமிது. 14,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்கொண்டது.)
அதானி கிரீன் எனர்ஜி (இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனம்)
அதானி எண்டர்பிரைசஸ் (இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர். அதோடு இந்தியாவின் மிகப்பெரிய கனிம வள, தாதுப் பொருட்கள் வர்த்தக நிறுவனம் இது.)
இப்படி பல தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி தற்போது உலகின் 4வது பெரிய கோடீஸ்வரராக உள்ளார். முகேஷ் அம்பானி உலகளவில் 10வது இடத்தில் உள்ளார்.
businesstoday