பூமியில் தங்கம் முதன்முதலில் எப்படி உருவானது தெரியுமா?
பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.
இந்நிலையில், பூமியில் தங்கம் முதன்முதலில் எப்படி உருவானது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆய்வுகளின் படி, தங்கம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது.
தங்கத்தின் உருவாக்கம் பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரபலமான கோட்பாடு நியூட்ரான் நட்சத்திர மோதல்களே ஆகும்.

இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும்போது, அந்த நிகழ்வு அபரிமிதமான ஆற்றலையும் கனமான தனிமங்களையும் வெளியிடுகிறது.
இந்த மோதல்களின்போது தங்கம், பிளாட்டினம் மற்றும் யுரேனியம் போன்றவை உருவாகி இது விண்வெளி முழுவதும் வீசப்படுகின்றன.
பிரபஞ்சத்தில் உருவான தங்கம், விண்வெளித் தூசியாக மாறி நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை உருவாக்கிய மேகங்களுடன் கலந்தது.
பூமி உருவான போது அந்த தங்கம் பூமிக்குள் சேர்ந்தது. மேலும் விண்கற்கள் மூலமாகவும் தங்கம் பூமிக்கு வந்தது.
இறுதியாக, தங்கம் பூமியின் மேலோட்டில் இருப்பதுடன், அதன் மிக ஆழமான பகுதிகளிலும் காணப்படுகிறது.
பூமி உருவான ஆரம்பத்தில் அது முழுவதும் உருகிய நிலையில் இருந்ததால் தங்கம் உள்ளிட்ட கன உலோகங்கள் மையப்பகுதிக்குச் சென்றன.
பின்னர் எரிமலை வெடிப்புகள் மற்றும் விண்கல் மோதல்களால் தங்கம் புவி மேற்பரப்புக்கு வந்து மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தின் விலை உயர்வதற்கான முதன்மை காரணம், அதை உருவாக்கும் அரிதான அண்ட நிகழ்வுகள் மற்றும் பூமியில் கிடைக்கும் தங்கத்தின் குறைந்த அளவு.
மேலும், தங்கத்தை தோண்டி பிரித்தெடுப்பது மிகக் கடினமான செயல்முறையாக இருப்பதால் தங்கத்தின் விலை உயருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |