ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறுகண்ணில் வெண்ணெயும்... தன் குடிமக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் சுவிஸ் அரசியல்வாதிகள்
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம். சுவிட்சர்லாந்தில் வாழும் அகதிகளுடன் அவர்களுடைய குடும்பத்தினர் இணையும் விடயத்தில் சுவிட்சர்லாந்து உரிமை மீறலில் ஈடுபடுவதாக சமீபத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமே விமர்சித்திருந்தது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைவதற்கு வெவ்வேறு வகையான விதிகள் உள்ளன.
அகதிகள் விடயத்தில் மனித உரிமை மீறல்
சுவிட்சர்லாந்து, மனித உரிமைகள் தொடர்பிலான ஐரோப்பிய ஒப்பந்தத்தின் 8ஆவது பிரிவை மீறியுள்ளதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது.
மூன்று எரித்ரியர்கள் மற்றும் ஒரு திபெத் வம்சாவளியினரான சீனர் ஆகியோர், 2008க்கும் 2012க்கும் இடையில் சுவிட்சர்லாந்து வந்துள்ளார்கள், அவர்களுக்கு அகதி நிலை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அரசின் நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள். ஆனால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அரசு உதவி பெறுவோர், தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துக்கொள்ளமுடியாது.
Swissinfo
ஆகவே, இந்த நான்கு அகதிகளுக்கும் தங்கள் குடும்பத்தினருடன் இணைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நான்கு பேரில் இருவர் பணிபுரிந்து வருவதையும், ஒருவர் பணி செய்யும் நிலையில் இல்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஒருபுறம், இந்த அகதிகள் தங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைவதில் காட்டும் ஆர்வம், மறுபுறம், நாட்டின் பொருளாதார நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆர்வம் என இரு விடயங்களுக்கும் இடையில் சுவிஸ் அதிகாரிகள் நியாயமான சமநிலையைப் பின்பற்றவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறுகண்ணில் வெண்ணெயும்...
இப்படி மற்ற நாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரச்சினை செய்யும் சுவிட்சர்லாந்து, தன் குடிமக்களின் குடும்பத்தினரான வெளிநாட்டவர்களுக்காக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது, சுவிஸ் குடிமக்களின் குடும்பத்தினராகிய வெளிநாட்டவர்கள், தங்கள் குடும்பத்துடன் இணைவதை எளிதாக்கவேண்டும் என, சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார்.
Swissinfo
Angelo Barrile என்னும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள அந்த மசோதா, சுவிஸ் குடிமக்களும், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் European Free Trade Association என்னும் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்களும் (EU and EFTA) சமமாக நடத்தப்படவேண்டும் என்கிறது.
அதன் பொருள் என்னவென்றால், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களாகிய சுவிஸ் குடிமக்களின் குடும்பத்தினர், சுவிட்சர்லாந்திலுள்ள சுவிஸ் குடிமக்களாகிய தங்கள் குடும்பத்தினருடன் இணைவதற்கு, அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளின் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வைத்திருக்கவேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்கிறது அந்த மசோதா.
ஆனால், இந்த மசோதா, புலம்பெயர்தலை மட்டுப்படுத்தும் அரசியல் சாசனப் பிரிவுடன் ஒத்துப்போகிறதா என்பதை விளக்கவேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளை சுவிஸ் அரசு வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |