Omicron வகை கொரோனா வைரஸ் பரவுவது எப்படி?: வெளியாகியுள்ள புதிய தகவல்
Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் முதல், பல்வேறு விடயங்கள் இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒரு பக்கம் உலக சுகாதார அமைப்பு Omicron வகை கொரோனா வைரஸ் கவனம் செலுத்தவேண்டிய ஒரு வைரஸ்தான் என்று கூற, இன்னொரு பக்கம் அந்த வைரஸ் தொற்று எந்த நாட்டில் துவங்கியதோ அந்த நாட்டு அறிவியளாளர்கள், அதாவது, தென்னாப்பிரிக்காவில்தான் இந்த மரபணு மாற்றம் பெற்ற Omicron வகை கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, அந்நாட்டு மருத்துவர்கள், இதுவரை இவ்வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஆக, இந்த Omicron வகை கொரோனா வைரஸ் குறித்து பல விடயங்கள் இன்னமும் சரியாக தெரியாத நிலையில், அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டவண்ணம் உள்ளார்கள்.
அவ்வகையில், ஆய்வு மேற்கொண்ட பிரித்தானிய அறிவியலாளர்கள், இந்த Omicron வகை கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பெருமளவில் பரவக்கூடும் என தற்போது தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், Omicron வகை கொரோனா வைரஸ் ’காற்றின் மூலம் பெருமளவில் பரவக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த முடிவுகள் ஆரம்பகட்ட முடிவுகளே என்றும், இந்த தகவலை உறுதி செய்ய இன்னமும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா, மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் கட்டுப்பாட்டை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.