சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா கோஹினூர் சர்ச்சையை முறியடித்தது இப்படி தான்!
சார்லஸ் மன்னரின் முடிசூட்டும் விழா நடைபெறும் நிலையில், அது கோஹினூர் வைரம் தொடர்பான விவாதத்தை மறைத்திருக்கிறதென செய்தியாளர்களால் கூறப்படுகிறது.
கோஹினூர் வைரம் சர்ச்சை
இந்தியாவால் உரிமை கோரப்பட்ட காலனித்துவ காலத்து கோஹினூர் வைரம் தொடர்பாக, பிரித்தானியாவில் எழுந்த சர்ச்சை சார்லஸ் மன்னர் முடிசூட்டப்படுவதால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
@rct.uk
அடுத்த மாதம் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில், அவரது இரண்டாவது மனைவியான கமிலாவும் ராணியாக பதவியேற்கிறார்.
@gettyimages
இந்த நிலையில் முடிசூட்டு விழாவில் ராணி கமிலா அணியும் நகைகளின் வரிசையில், ராணி மேரி அணிந்த கோஹினூர் கீரிடமும் இடம்பெற்றுள்ளது. இதனை கமிலா தான் தேர்வு செய்திருக்கிறார்.
கீரிடத்தை தேர்ந்தெடுத்த ராணி
இதுபற்றி பேசிய மெயில் பத்திரிக்கையின் செய்தி தொடர்பாளர் “கோஹினூர் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம் என்று அரண்மனை உணர்ந்ததாக நான் நினைக்கிறேன், எனவே இந்த வைரங்களின் ஆதாரம் பற்றி தேவையற்ற வதந்திகள் வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்" என்று பத்திரிக்கையாளர் டோமினி கூறியுள்ளார்.
@mail
"அடிப்படையில், அரண்மனை கிரீடத்தில் உள்ள நகைகளைப் பற்றி தனி விவாதம் செய்யாமல், பாதுகாப்பான மற்றும் விவேகமான காரியத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது" என்று டோமினி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், பிரிட்டனின் அரண்மனைகளை நிர்வகிக்கும் தொண்டு நிறுவனமான ஹிஸ்டாரிக் ராயல் பேலசஸ், பிரபலமான இந்த வைரமானது, லண்டன் கோபுரத்தில் முதன்முறையாக "வெற்றியின் சின்னமாக" வகைப்படுத்தப்படும் புதிய ஜூவல் ஹவுஸ் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறியுள்ளது.
முடிசூட்டு விழாவில் புதுமை
ராணி மேரியின் கிரீடத்தை கமிலா தேர்ந்தெடுத்தது, மன்னரின் மனைவியின் முடிசூட்டு விழாவிற்கு தற்போதுள்ள கிரீடம் பயன்படுத்தப்படுவதற்கான முதல் நிகழ்வையும் குறிக்கிறது.
@geonews
கடந்தகால கிரீடங்கள் அனைத்தும் மன்னர்களின் புதிய மனைவிக்காக சிறப்பாக செய்யப்பட்டன. 74 வயதான சார்லஸ் மற்றும் 75 வயதான கமிலா ஆகியோரால் செய்யப்பட்ட பாரம்பரிய முறையிலிருந்து விலகல்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும் பிரித்தானிய அரசக்குடும்பத்தில் புதிய ஒரு முயற்சியாக, நவீன காலத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் விதமாக பார்க்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.