செல்போன் சிக்னலை முடக்கும் கிட்காட் உறை - எப்படி செயல்படும்?
நெஸ்ட்லே நிறுவனத்தின் கிட்காட் சாக்லேட் உலகளவில் பிரபலமானது. நீண்ட காலமாக “ஓய்வு எடுங்கள்” (Take a Break) என்ற அதன் புகழ்பெற்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறது.
தற்போது அதனை தீவிரமாக எடுத்து, உங்கள் செல்போனிலிருந்து ஓய்வு எடுக்கும் வகையிலான தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிட்காட் பிரேக் மோட் உறை
கிட்கேட் பனாமா, ஓகில்வி கொலம்பியா என்ற கிரியேட்டிவ் ஏஜென்சியுடன் இணைந்து “பிரேக் மோட்” (Break Mode) என்ற அசாதாரணமான உறையை உருவாக்கியுள்ளது.

இந்த உறையின் உள்ளே உங்கள் செல்போனை வைத்த பின்னர், அதற்கு WIFI, மொபைல் நெட்ஒர்க் ஆகியவற்றில் இருந்து துண்டித்து விடுகிறது.
செல்போன் தொந்தரவு இல்லாமல் கிட்காட் சாக்லேட்டை நீங்கள் ரசித்து சாப்பிடலாம்.
எப்படி செயல்படும்?
இந்த உறையில் செம்பு, பாலியஸ்டர் மற்றும் பாலிபுரோப்பிலீன் ஆகியவற்றால் ஆன ஒரு சிறப்பு அடுக்கு உள்ளது.
மொபைல், வைஃபை அல்லது ரேடியோ அலைகள் இந்த உலோகப் பரப்பின் வழியே செல்ல முயற்சிக்கும்போது, உலோகத்திற்குள் இருக்கும் மிகச்சிறிய துகள்கள் வேகமாக நகர்ந்து, சிக்னல்கள் உள்ளே செல்வதைத் தடுக்கிறது.
இது, ஒட்டுக்கேட்பு அல்லது தரவுக் கசிவுகளைத் தடுப்பதற்காக, மருத்துவ மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களிலும், தரவுப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு மையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு வருடம் வரை அதன் செயல்திறன் குறையாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இதை மறுசுழற்சி செய்யலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |