மனித சிறுகுடலின் நீளம் எவ்வளவு தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
சிறுகுடலின் நீளம் பெரிதும் வேறுபடுகிறது. குறைந்த அளவாக 2.75 மீட்டர் நீளம் (9.0 அடி) முதல் அதிக அளவாக 10.49 மீ (34.4 அடி) வரையில் இந்த அளவு மாறுபடுகின்றன.
மனிதர்களின் சிறுகுடல் சராசரியாக 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை வேறுபடுகிறது. நபருக்கு நபர் காணப்படும் உயரத்தைச் சார்ந்தும், எவ்வாறு சிறுகுடல் நீளம் அளவிடப்படுகிறது என்பதைப் பொருத்தும் இந்நீள மாறுபாடுகள் அமைகின்றன.
பொதுவாக உயரமான மனிதர்களுக்கு நீண்ட சிறு குடல் காணப்படுகிறது. குடல் காலியாக உள்ள போதும், இறந்த பிறகு எடுக்கப்படும் அளவுகளும் பொதுவாகவே நீளமாக இருக்கும்.
சிறுகுடலின் விட்டம் சுமார் 2.5-3 செ.மீ (1 அங்குல) அளவுக்கு காணப்படுகிறது. இவ்விட்டத்தின் அளவு சுமார் 3 செ.மீ வரைக்கும் விரிவடைவதாக வயிற்று எக்சு கதிர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.