இறந்த மனிதர்களின் எலும்புக்கூடு மண்ணில் எவ்வளவு காலம் இருக்கும்?
மண்ணின் தன்மையை பொறுத்து எலும்புகள் சிதைவடையும் தன்மை மாறுபடும்.
அதாவது மண்ணில் உள்ள காரம் மற்றும் அமிலத்தன்மையின்(ph) மதிப்பு மற்றும் அந்த மண்ணில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்களின் தன்மை மற்றும் ஈரப்பதம், வெப்பநிலையை பொறுத்து எலும்பு சிதைவடையும் காலம் மாறுபடலாம்.
சாதாரணமாக இறந்த வரின் உடலை 6 அடி பள்ளத்தில் சவப்பெட்டி இல்லாமல் புதைத்தால் அந்த மண்ணின் ஈரத் தன்மையை பொறுத்து 8 முதல் 14 ஆண்டுகளில் எலும்பானது சிதைக்கப்படும்..
இதுவே வெப்பம் அதிகமான மணல் பாங்கான பகுதிகளில் புதைக்கப்படும் உடலின் எலும்பானது சிதைந்து தூள் ஆவதற்கு 100 வருடங்களுக்கு மேல் கூட ஆகலாம். ஏனெனில் வெப்பம் மிகுதியான இடத்தில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் வாழாததே அதற்கு காரணம்.
அதுவே ஒரு தரமான சவப்பெட்டியில் இறந்தவரின் உடலை வைத்து புதைத்தால்.......
உடலானது ஒரே சீராக அழிவுறும். அதாவது உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு திரவமாக மாறி வெளியேறி. அந்த உடலை சுற்றி மெழுகு போன்ற ஒன்று உருவாகிவிடும்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் எலும்பு தோலுடன் ஒட்டி கருவாடு போன்ற ஒரு அமைப்பு உருவாகி. பின் உடல் தோலும் சிதைவுற்று, எலும்பில் உள்ள கோலஜன் திசுக்கள் நுண்ணுயிரிகளால் அழிக்கப்பட்டு ஏறத்தாழ 80 ஆண்டு முதல் 100 ஆண்டுக்குள் எலும்பானது சிதைவுற்று தூளாகிறது.
அடுத்ததாக மம்மி என்று அழைக்கப்படும் பதப்படுத்தப்பட்டு(Embalming) பாதுகாக்கப்படும் முறையில்…………
இம்முறையில் உடலை பாதுகாக்க பல வேதியியல் முறையுடன், உடலை சுற்றி துணியால் சுற்றப்பட்ட பாதுகாக்கப்படுகிறது.இவ்வாறு பாதுகாக்கப்படும் மம்மிகள் கிட்ட தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சிதைவுறாமல் உள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் வட அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்கலாகும். அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செயற்கை மற்றும் இயற்கை முறையிலும் இந்த எம்பால்மிங் முறையில் மம்மிகள் உருவாகிறது.