வானவில் எவ்வளவு நேரம் வானில் இருக்கும்? பின் எப்படி கலையும்?
பொதுவாக மழை பெய்யும்போது நமக்கு தெரியும் வானவில் குட்டி குட்டி மழை துளிகளின் மீது சூரியனின் ஒளி பட்டு தெளிப்பதன் மூலம் வானவில் நமக்கு தெரிகிறது.
மழைத்துளியின் வடிவம் பூமியை நோக்கி வரும் பொழுது வட்டமாக இருப்பதனால் வானவில்லும் வட்ட வடிவம் கொண்டதாக இருக்கிறது ஆகவே மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் முக்கோணம்(prism) போல் மழைத்துளி செயல்படுவதனால் அழகான வானவில் தெரிகிறது.
பெரும்பாலும் வானவில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே காணப்படும் .
மேகம் வந்து சூரியனின் கதிர்களை மறைத்தால் வானவில் கலைந்துவிடும். நீங்கள் நிற்கும் இடம் பொருத்து வானவில் வேறுபடும்.
எவ்வளவு நேரம் நீர்த்துளிகள் வளிமண்டலத்தில் இருக்குமோ, அவற்றின் ஊடே கதிரவன் கதிர்கள் பாயுமோ அதுவரை வானவில் இருக்கும்! வளிமண்டல நீர்த்துளிகள் மறைய மறைய வானவில்லும் மறையத் தொடங்கும்!