பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகியுள்ளது?
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு ஏற்பட்ட செலவு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
எத்தனை கோடி?
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
அதன்படி, 3 ஆண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.258 கோடி செலவாகி உள்ளதாக இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

UGC NET தேர்வில் 7 முறை, JRF தேர்வில் 2 முறை தேர்ச்சி பெற்றவர்.., 3 அரசு வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு என்ன செய்கிறார்?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, 2022ம் ஆண்டு மே மாதம் முதல் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பிரதமர் மோடி 38 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
மோடியின் பயணம், அவருடைய பாதுகாப்பு, உடன் சென்ற அதிகாரிகள், ஊடக தொடர்பு ஆகியவற்றிற்காக ரூ.258 கோடி செலவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக கடந்த 2023 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்துக்காக 22 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
மேலும், ஜப்பானுக்கு செல்ல ரூ.17 கோடியே 20 ஆயிரம், இத்தாலி பயணத்துக்கு ரூ.14 கோடியே 36 லட்சம் , செலவாகியுள்ளது.
பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தில் குறைந்தபட்சமாக 2022ம் ஆண்டு நேபாள பயணத்துக்கு 80 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.
இந்த மூன்று ஆண்டுகளில் அலுவல் ரீதியாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |