Private Jet Maintenance பண்ணுவதற்கு எத்தனை கோடி செலவாகும் தெரியுமா?
உலகத்தில் உள்ள பெரும் செல்வந்தர்கள் தனி விமானங்கள் வைத்திருக்கும் நிலையில், அதனை மெயிட்டனன்ஸ் பண்ணுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பார்க்கலாம்.
எவ்வளவு செலவாகும்?
இந்தியாவில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களும், சில திரை பிரபலங்களும், சில அரசியல் பிரபலங்களும் தனி விமானங்கள் (Private Jet) வைத்திருக்கின்றனர்.
பிரைவேட் ஜெட்டை குறைந்த விலையில் வாங்கினால் கூட அதற்காக ரூ.30 கோடி செலவழிக்க வேண்டும். மேலும், அதனை விமான நிலையங்களில் நிறுத்தி வைப்பதற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது, பார்க்கிங்கிற்காக மாதத்திற்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும். அதோடு, Hangar கட்டணம் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது.
இது விமானத்தின் எடை மற்றும் நிறுத்தி வைக்கப்படும் காலத்தை பொறுத்து மாறுபடும். மொத்தமாக பார்க்கிங் மற்றும் ஹாங்கர் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1.4 கோடி செலவு செய்ய வேண்டும்.
இதை தவிர விமானிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்க வேண்டும். மேலும், விமானம் பறப்பதற்கு தேவைப்படும் எரிபொருளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். அதன்படி, ஆண்டுக்கு 100 மணி நேரம் பறந்தால் ரூ.1 கோடி செலவாகும்.
அதனை தொடர்ந்து, விமான நிலையங்களில் தரையிறக்குவது மற்றும் டேக் ஆஃப் செய்வது போன்றவற்றிற்காக கட்டுப்பாடு அறைகளில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்காக ரூ. 2 கோடி செலுத்த வேண்டும்.
மேலும், விமான பராமரிப்பு பணிகள் மற்றும் காப்பீடுக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இதுதவிர மற்ற பணிகளுக்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும்.
எனவே, சொந்தமாக ஜெட் வாங்குபவர்கள் வாங்கியதுடன் சேர்த்து ஆண்டுக்கு என மொத்தமாக 33 கோடி ரூபாய் செலவிட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |