இன்ஸ்டாவில் 274M.., விராட் கோலியின் ஒரு பதிவிற்கு எத்தனை கோடி கிடைக்கும் தெரியுமா?
பொதுவாக, சர்வதேச அளவில் பார்க்கும்போது விளையாட்டு வீரர்கள் தான் இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்களை பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட்டில் பிரபல விளையாட்டு வீரரான விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
விளையாட்டு வீரர்களிலேயே விராட் கோலி 274 மில்லியன் ஃபாலோயர்களுடன் 14வது இடத்தில் இருக்கிறார்.
விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் எவ்வளவு கிடைக்கும் என்ற தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
தற்போதைய சூழலில் விராட் கோலிக்கு சுமார் 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துமதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில். இன்ஸ்டாகிராமில் விராட்கோலி ஒரு பதிவை வெளியிட்டால் அவருக்கு சுமார் 12 கோடி ரூபாய் வரையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி பிரபல பூமா (PUMA) ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் நீண்ட காலமாக ஒப்பந்தத்தில் இருந்து வருகிறார்.
அவர் பூமா குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர், இந்நிறுவனத்தில் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |