கொரோனா தடுப்பூசி எத்தனை நாட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும் தெரியுமா? இதோ முழு விபரம்
கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரே அம்சம் தடுப்பூசிதான். தடுப்பூசிதான் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்.
இதை பற்றிய கருத்துக்களும், வதந்திகளும் ஆரம்பத்தில் கட்டுக்கடங்காமல் பரவின. ஆனால் இன்று தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் தினம் தினம் தடுப்பூசி தட்டுப்பாடுகள் இருக்கின்றன.
இந்தியா தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உலக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. என்னதான் தடுப்பூசி குறித்த பாசிடிவ் விழிப்புணர்வு மக்களிடம் இருந்தாலும் இன்னும் சில சந்தேகங்கள் அவர்களுக்குள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் தடுப்பூசி எவ்வளவு நாளைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும்..? இதற்கான விடையை அலசுவோம்.
கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு வழிகளில் உற்பத்தி செய்ய முடியும். ஒன்று, வைரஸால் பாதிக்கப்பட்டு நோய்த்தொற்று ஏற்படுவதன் மூலம் ,அதாவது, நம் உடல்கள் எவ்வாறு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்பதை பொருத்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் அல்லது ஒரு தடுப்பூசி மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
இரண்டு வகையான நோய் எதிர்ப்பு சக்திகளும் ஒரே மாதிரியான பாதுகாப்பை வழங்குகின்றன. இருப்பினும், ஒருவருக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி தேவையான காலகட்டத்தில் எதிர்த்து போராடும் பலத்தை கொண்டிருந்தாலும் தடுப்பூசி மூலம் இயக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மேலதிகமாகவும் அதற்கு அப்பாலும் சென்று கூடுதல் அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. ஏற்கனவே வைரஸை எதிர்த்துப் போராடியவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவதற்கும் இதுவே காரணம்.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் நிச்சயமாக கூடுதல் நன்மையை அளிக்கின்றன. மேலும் அவை சமூக அளவிலான நோய்த்தடுப்பு மருந்துகளை மேம்படுத்துவதற்கு அவசியமானவை என்றாலும், நம்மிடம் உள்ள தடுப்பூசிகள் இன்னும் சோதனைக்குரியவை என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே தடுப்பூசி மூலம் இயக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு எந்தவொரு வரையறையும் இல்லை.இதுவரை அவ்வாறு எந்த ஆய்வும் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிடவும் இல்லை.
இந்தியாவில் போடப்படும் இரு வெவ்வேறு தடுப்பூசிகள் வித்தியாசமாக வேலை செய்ய முனைகின்றன. எனவே, இரண்டும் வெவ்வேறு நிலையான பாதுகாப்பு மற்றும் நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடும்.
தற்போது பரவி வரும் டெல்டா வைரஸின் மாறுபாடுகள் அதிக பரவலை, தொற்றை ஏற்படுத்தும் என பீதியில் உள்ளனர். இது தடுப்பூசிகளையே விஞ்சும் ஆற்றல் கொண்டது என்றும் இதனால் தடுப்பூசி மூலம் பொருத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதுகாப்பையும் குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தடுப்பூசியால் கொஞ்சமேனும் பாதுகாப்பு இருக்கும். அறிகுறிகள் குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நோய்த்தொற்று பரவும் இந்த நேரத்தில் எந்த தடுப்பூசிகளும் முழுமையான 100% செயல்திறனை கொண்டிருக்கும் என உத்தரவாதம் அளிக்கவில்லை. இருப்பினும், சில தடுப்பூசிகள் மற்ற காரணிகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள், அல்லது மெசஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகள், மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகின்றன.
நேச்சர் என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் நீடிக்கும் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிந்தது. அதன் கண்டுபிடிப்புகளை முடிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், தடுப்பூசிகளால் கிடைக்கும் வாழ்நாள் பாதுகாப்பைக் குறிக்கும் முதல் ஆய்வு இதுவாகும்.
கூடுதலாக, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி போட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் 13 வாரங்களுக்கு COVID-19 க்கு சோதனை செய்யப்பட்டனர். தடுப்பூசிகள் உச்சகட்ட நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன என்பதை கண்டறிந்துள்ளது. அதோடு இது நீண்ட காலத்திற்கு நீடித்திருந்தது.
சில தடுப்பூசிகள் நன்கு பயனுள்ளவையாகவும், தொற்றை எதிர்க்கக்கூடியவையாகவும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், விஞ்ஞானிகள் ‘கூடுதல்’ தடுப்பூசிகளின் பூஸ்டரை வழங்கலாமா , அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பன குறித்த ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மூன்றாவது, பூஸ்டர் ஷாட்,முதல் டோஸ் போட்டு 10 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டது. இதனால் நோயெதிர்ப்பு சக்தியின் நீடித்த ஆற்றலை மிகச் சிறந்த முறையில் அளவிட முடியும். அதாவது வழக்கமாக இரண்டு-டோஸ் போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டிலும் நீடித்த , உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க முடியும்.
இந்த மூன்றாவது டோஸ் தொற்று நோய்கள் மட்டுமன்றி கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. அதாவது பருவகால காய்ச்சல் , சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும் தடுக்கக்கூடிய ஆற்றல் தடுப்பூசிகளிடம் உள்ளன. அதோடு நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள, அல்லது தடுப்பூசி வேலை செய்வதைக் கட்டுப்படுத்தும் சுகாதார நிலைமைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, கூடுதல் தடுப்பூசி வழங்குவது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க உதவும் என்று கூறப்படுகிறது.