பன்றி இறைச்சி உண்பதால் எவ்வளவு தீமைகள் உள்ளதா? ஜாக்கிரதையாக இருங்க
பொதுவாக பன்றி இறைச்சி என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை.
எல்லா இறைச்சிகளையும் போலவே, பன்றி இறைச்சியும் பெரும்பாலும் புரதம் மற்றும் கிட்டத்தட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் இல்லை.
ஆனால் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஹிஸ்டைடின், லைசின், லியூசின், த்ரோயோனைன், வாலின் மற்றும் ஃபெனைலாலனைன் ஆகியவை இதில் இருக்கின்றது.
இதில் என்னத்தான் ஆரோக்கியம் அளிக்கும் ஊட்டசத்துக்கள் இருந்தாலும் இதனை உண்ணுவது உடலுக்கு ஆபத்தையே விளைவிக்கும்.
ஏன் சாப்பிட கூடாது?
பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன என்று சொல்லப்படுகின்றது.
இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கி விடுகிறது.
இதனை மனிதன் உண்ணுவதனால் நாடாப்புழுகள் இடும் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை இருப்பதாக கருப்படுகின்றன. இதனால் உடலுக்கு பல ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றது.
அதனால் தான் பலரும் பன்றி இறைச்சி சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கு என்று கூறுகிறார்கள்.
தீமை என்ன?
- நாடா புழுக்களின் முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழக்கின்றான்.
- இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது.
- இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கப்படுகின்றது.
- இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது.
ஆய்வு கூறுவது என்ன?
சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் குடற்புழு உண்டு என ஆய்வு கூறுகின்றது. எனவே இவற்றை முடிந்தவரை தடுப்பது நல்லதாகும்.