ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது ?
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.
முட்டையில் உயர் தர புரதச்சத்து உள்ளது. ஒரு முட்டையில் 7 கிராம் அளவுக்கு உயர் தரமான புரதச்சத்து உள்ளது. மேலும் இரும்புச் சத்து, வைட்டமின்கள் என ஊட்டச்சத்துகளின் பெட்டகமாக முட்டை விளங்குகிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதனால் உடல் நலக் குறைபாடு வராது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்தும் ஓரளவுக்கு கிடைத்துவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினம் ஒரு முட்டை உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.
இருப்பினும் சிலருக்கு ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகளை எடுத்து கொள்ளலாம் என்ற சந்தேகம் உள்ளது. தற்போது அவை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
எத்தனை முட்டை எடுத்து கொள்ளலாம்?
- பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.
- கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும்.
- உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுத்து சாப்பிடப் பழக்க வேண்டும்.
- உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
வெள்ளைக்கருவில் உள்ள நன்மைகள் என்ன?
- முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிகமாக வருகிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
- முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள்.
எதில் சத்து அதிகம்?
வெள்ளை கருவை விட அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் மஞ்சள் கருவில் அடங்கியுள்ளது. ஒரு மஞ்சள் கருவில் பி6, ஃபோலேட், பி வைட்டமின், பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் அதில் வைட்டமின்களும், கனிமங்களும் கூட அடங்கியுள்ளது. இது உங்கள் உடல் செயற்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமானவையாகும்.