சுவிட்சர்லாந்தில் எவ்வளவு புலம்பெயர்ந்தோர் வாழ்கிறார்கள்?
சுவிட்சர்லாந்தில் வாழும், சுவிஸ் நாட்டவர் அல்லாதவர்களின் எண்ணிக்கை, சுவிஸ் மக்கள் தொகையில் 27 சதவிகிதம் ஆகும்.
2023ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2.3 மில்லியன் ஆகும். அவர்களில் ஐந்தில் ஒருவர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர் ஆவார்.
எந்த நாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் அதிகம் வாழ்கிறார்கள்?
சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்தோரில், 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, 72 சதவிகிதம் பேர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில், இத்தாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் 14 சதவிகிதம், ஜேர்மானியர்கள் 13.4 சதவிகிதம், பிரான்ஸ் நாட்டவர்கள் 6.8 சதவிகிதம்.
ஆனால், மூன்றாம் நாட்டவர்கள் என அழைக்கப்படும் அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளார்கள்.
அதற்குக் காரணம், சுவிட்சர்லாந்து இவர்களுக்கு வழங்கும் பணி அனுமதிகள் ஆண்டொன்றிற்கு 12,000 மட்டுமே.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |