ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் எத்தனை பேர் வேலை இழக்க நேரிடும்?
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் பலரும் வேலை இழப்புகளை சந்திப்பார்கள்.
என்னென்ன துறைகள்?
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்கள் மீது முதலில் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இதையடுத்து வரி விகிதத்தை 50% ஆக உயர்த்தினார்.
இது இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக மாறியது. இதனால் ஜவுளி, ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர்களை சார்ந்த துறைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.
இதனால், சிலர் தனது தொழிலை கைவிடலாம். அதன்படி, மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழக்க நேரிடும் அபாயம் உருவாகியுள்ளது.
கடந்த 2024 நிதியாண்டில் ஜவுளி மற்றும் ஆடைத் துறைகளில் மட்டும், இந்தியா 10.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும், ஆடைத்துறையில் 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (AEPC) கூறுகையில், "இந்தத் துறையில் நேரடியாக 1.45 கோடி பேர் வேலை செய்கிறார்கள்.
சரிகைகள், அலங்காரப் பொருட்கள், லேபிள்கள், பாலிபேக்குகள், அட்டைப்பெட்டிகள், எலாஸ்டிக், நூல் மற்றும் செயல்முறை வீடுகள் போன்ற துணைத் துறைகளில் 2.9 கோடி பேர் வேலை செய்கிறார்கள்.
அதன்படி இந்தத் துறையில் சுமார் 45 மில்லியன் அல்லது 4.5 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (AEPC) தலைவர் சுதிர் சேக்ரி கூறுகையில், "குறைந்தது 25% அல்லது சுமார் 1 கோடி பேர் வேலை இழக்க நேரிடும்.
அடுத்த 4-5 மாதங்களுக்கு நிதி இருப்பு இல்லாத குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை மூடுவார்கள்.
அமெரிக்காவிற்கு தங்கள் ஓர்டர்களில் 90-95 சதவீதத்தை ஏற்றுமதி செய்யும் பெரிய ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்பாடுகளை மூடுவார்கள்" என்றார்.
50% அமெரிக்க வரிகளால் துணி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது போல் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கலாம் என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (CITI) பொதுச் செயலாளர் சந்திரிமா சாட்டர்ஜி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |