சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் எவ்வளவுபேர் தெரியுமா?
பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் 39 சதவிகிதம்பேர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என தெரிவிக்கின்றன.
அவர்களில் 31 சதவிதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள், 8 சதவிகிதம்பேர் சிறுவர்கள்.
2012இலிருந்து 2021வரையிலான காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்து, 39 சதவிகிதமாகியுள்ளது.
2021இல், சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியினர் (63%) வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் (37%)சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
தகுதி இருந்தும் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினை
மோசமான விடயம் என்னவென்றால், கல்வியும் மொழித்திறமையும் தகுதியும் இருந்தும், இந்த புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்களுக்கு வேலை கிடைக்கும் விடயத்தில் அதிக பிரச்சினை இருந்துள்ளது. சுவிஸ் நாட்டவர்களில் 3 சதவிகிதம் பேர் வேலையின்மையால் வாடும் நிலையில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் 8 சதவிகிதம் பேர் வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.