பிரித்தானியாவில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது? தற்போதைய நிலை என்ன? வெளியான முழு புள்ளி விவரம்
பிரித்தானியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகைய கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருந்த போது, இதைக் கட்டுப்படுத்துவதற்காக தைரியமாக தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி அளித்தது.
தற்போது பிரித்தானியா வரலாற்றில் மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களால கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒரு இலக்கு வைத்து, பிரித்தானியாவில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 13-ஆம் திகதி வரை அரசாங்க புள்ளிவிரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இதுவரை முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 47,254,399-ஆக உள்ளது.
89.3 சதவீதம் முதியவர்கள் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இதில் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 40,372,981 ஆக உள்ளது.
அதில், 76.3 சதவீதம் முதியவர்கள் முழு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் கணக்கிட்டு பார்த்தால், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் திகதி வெள்ளிக் கிழமை முடிவில், பிரித்தானியாவில் 87,627,380 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது தெரியவருகிறது.
பிரித்தானியா முழுவதும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை
- England - 39,645,073
- Wales - 2,310,898
- Scotland - 4,050,011
- Northern Ireland - 1,248,417
இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை
- England - 33,695,859
- Wales - 2,132,116
- Scotland - 3,431,062
- Northern Ireland - 1,113,944
பிரித்தானியாவில் என்னென்ன தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது?
- Pfizer/BioNTech (கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி முதல் அனுமதி)
- Oxford/AstraZeneca (கடந்த ஜனவரி 4-ஆம் திகதி முதல் அனுமதி)
- Moderna (கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி முதல் அனுமதி)
-
Johnson & Johnson (2021-இறுதிக்குள் விரைவில் அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)