தினமும் அதிகளவு தேநீர் குடிப்பவரா? உங்களுக்கான பதிவு தான் இது
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அருந்துவது அவர்களுடைய தினசரி பழக்கமாகவும் அதை குடிக்காவிட்டால் அந்த தினம் அவர்களுக்கு துவங்காதது போல் அவர்கள் எண்ணுகிறார்கள்.
இருப்பினும் அளவிற்கு அதிகமாக நாம் தேநீர் அருந்தும் பொழுது நமக்கு அதனால் சில பிரச்சனைகள் வருகிறது. அதில் நாம் வரக்கூடிய மூன்று முக்கியமான பிரச்சனைகளை பற்றி பார்ப்போம். பொதுவாகவே, ஒருவர் அதிக அளவிலான தேநீர் அல்லது காபி குடிக்கும் நபராக இருந்தால் அவர்களுக்கு தூக்கமின்மை பாதிப்பு வரலாம்.

ஆகையால் இரவு சரியான தூக்கம் இல்லாமல் மறுநாள் ஒரு சோர்வான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இரண்டாவதாக, சிலருக்கு அமிலத்தன்மை, வாயு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அதிலும், குறிப்பாக வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக்கூடிய பழக்கம் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும், தேநீர் குடிக்க கூடிய விளைவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு தேநீர் குடித்த பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டால் அவர்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. மூன்றாவதாக தேநீரில் இருக்கக்கூடிய டானின்கள்உணவில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை குறைக்க கூடும்.
அதனால், ரத்த சோகை இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடனே தேநீர் அருந்துவதை தவிர்ப்பது அவசியம். உணவிற்கும் தேநீர் குடிக்கவும் சிறிது நேரம் இடைவேளை கொடுப்பது முக்கியம். மேலும், தேநீரில் அதிகப்படியான சர்க்கரை கிரீம் அல்லது அதிக கலோரி கொண்ட பிறப் பொருட்களை சேர்ப்பது நம் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கக்கூடும்.

எனவே தேநீர் குடிக்கும் போது சர்க்கரை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்வது அவசியமாக பார்க்க வேண்டும். மேலும், தேநீர் பிரியர்கள் தேநீர் குடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்கின்ற அவசியமில்லை. தேநீரை அளவோடு எடுத்துக்கொண்டு சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவுகள் எடுத்துக் கொள்வதும் அவசியம்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு போதுமான தினசரி உடல் செயல்பாடு உடற்பயிற்சி, நல்ல தூக்கம், நல்ல ஊட்டச்சத்து, உணவு ஆகியவை மிகவும் அவசியம். மேலும், ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப்புகளுக்கு மேல் அதிகமாக தேநீர் குடிக்கும் போது அவை நம்முடைய உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று சொல்கிறார்கள்.