ஜேர்மனியில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் தற்போதைய பெடரல் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 9.60 யூரோக்களாக உள்ளது. அது 2022இல் 12 யூரோக்களாக அதிகரிக்கப்படலாம்.
ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான Olaf Scholz, குறைந்தபட்ச ஊதியத்தை 9.60 யூரோக்களிலிருந்து 12 யூரோக்களாக உயர்த்துவதாக வாக்களித்திருக்கிறார்.
இந்த மாற்றம், குறைந்தபட்ச ஊதியத்தை சார்ந்திருக்கும் சுமார் 10 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என Scholz கூறியுள்ளார்.
ஆனால், இந்த மாற்றம், படிப்படியாகத்தான் அறிமுகம் செய்யப்படும்...
ஜனவரி 1 அன்று 9.82 யூரோக்களாக அதிகரிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம், பின்னர் ஜூலை 1 அன்று, 10.45 யூரோக்களாக உயர்த்தப்படும்.
அதற்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு இறுதியில்தான் குறைந்தபட்ச ஊதியம் 12 யூரோக்களாக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.