உலகக்கோப்பை இறுதி போட்டியில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா?
உலகக்கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா அணிந்திருந்த உடையின் விலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அனுஷ்கா சர்மா
நேற்று (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியாவுக்கும், அவுஸ்திரேலியவுக்கும் இடையே நடைபெற்றது.
இதில், இந்திய அணிக்கு ஆதரவாக ஷாருக்கான், தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, இறுதி போட்டியின் முடிவில் இந்திய அணியின் தோல்வி காரணமாக விராட் கோலியை அனுஷ்கா சர்மா கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.
உடையின் விலை
இந்நிலையில், இறுதி போட்டியில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த உடையானது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இறுதிப்போட்டியில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த உடையானது கோடை அல்லது கடற்கரைக்கு செல்வதற்கு ஏற்ற ஸ்லீவ்லெஸ் ஹால்டர் மிடி உடையாகும். இதனுடைய பெயர் Flared Halter Dress - White & Blue. நீலம் மற்றும் வெள்ளை மலர் வடிவங்கள் கொண்ட இந்த உடையின் விலையானது ரூ.7,250 ஆகும்.
இதற்கிடையே, இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டியின் போது அனுஷ்கா சர்மா அணிந்திருந்த உடையின் விலை ரூ. 27,500 என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |