பிரான்ஸ் விசா பெறுவதற்கான கட்டணம் எவ்வளவு?
ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, பிரான்ஸ் விசாவுக்கான கட்டணம் குறைவுதான்.
பிரான்ஸ் வழங்கும் பலவகை விசாக்கள்
பிரான்ஸ், பணி செய்வதற்காக வருபவர்களுக்கு, கல்வி கற்பதற்காக வருபவர்களுக்கு, ஓய்வு காலத்தை செலவிட வருபவர்களுக்கு என பல வகை விசாக்களை வழங்குகிறது.
ஓய்வு பெற்றோருக்கான Visitor விசா உட்பட சில வகை விசாக்கள் பெறுவதற்கு மட்டும், நீங்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கும்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, பணி தொடர்பான விசாவுக்கு அந்நாடு வசூலிக்கும் கட்டணம் சுமார் 1000 யூரோக்கள்.
ஆனால், பிரான்சைப் பொருத்தவரை, எந்த வகை விசாவானாலும், அதற்கான கட்டணம் சுமார் 99 யூரோக்கள்தான்.
ஆக, அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு காலம் பிரான்சில் தங்கப் போகிறீர்கள் என்பதைப் பொருத்து அதற்கான அனுமதி வாங்குவதற்குத்தான் நீங்கள் கொஞ்சம் செலவிடவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |