எல்லைக் கட்டுப்பாடுகளுக்காக ஜேர்மனி செலவிடும் தொகை எவ்வளவு?
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தனது அண்டை நாடுகளுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது ஜேர்மனி.
ஆனால், அதற்காக ஜேர்மனி பெரும் தொகை செலவிடவேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகளுக்காக ஜேர்மனி செலவிடும் தொகை
ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளுக்காக இதுவரை செலவிட்டுள்ள தொகை, 80.5 மில்லியன் யூரோக்கள் என German Funke Media குழுமத்தின் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி, எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தார்.
ஷோல்ஸுக்குப் பின் மே மாதம் 6ஆம் திகதி சேன்ஸலராக பொறுப்பேற்ற பிரெட்ரிக் மெர்ஸும் அவரது கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றிவருகிறார்.
மூன்று மாதங்களுக்கு இந்த எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் எல்லை சோதனைகளுக்காக 24 முதல் 30 மில்லியன் யூரோக்கள் வரை செலவாகிறது.
இதில், எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பொலிசார் ஓவர் டைம் வேலை பார்த்ததற்கே 37.9 மில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |