ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எவ்வளவு செலவு ஆகும்?
ஜேர்மனி, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு எவ்வளவு செல்வாகும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
1. விண்ணப்பக் கட்டணம்
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ஆளாளுக்கு மாறுபடுவதில்லை. அது ஒரே கட்டணம்தான். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் பெரியவர்களுக்கு 255 யூரோக்கள், உங்கள் பிள்ளைகளுக்கு ஆளுக்கு 51 யூரோக்கள்.
2. அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழ் மொழிபெயர்ப்புக் கட்டணம்
உங்கள் பிறப்புச் சான்றிதழை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்க, 40 யூரோக்கள் முதல் 60 யூரோக்கள் வரை ஆகலாம்
3. அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ் மொழிபெயர்ப்புக் கட்டணம்
நீங்கள் திருமணமானவராக இருந்து உங்கள் திருமணச் சான்றிதழ் ஜேர்மன் மொழியில் இல்லையென்றால், அதை மொழிபெயர்க்க 30 முதல் 50 யூரோக்கள் வரை ஆகும்.
4. குடியுரிமைத் தேர்வுக் கட்டணம்
அதிகாரப்பூர்வ குடியுரிமைத் தேர்வு எழுதுவதற்காக செலுத்தவேண்டிய கட்டணம் 25 யூரோக்கள். 5. மொழித்தேர்வுக்கான கட்டணம் நீங்கள் எந்த தேர்வை எங்கு எழுதுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, மொழித்தேர்வுக்கு 200 முதல் 300 யூரோக்கள் வரை ஆகலாம்.
6. வருவாய் சான்றிதழை உறுதி செய்வதற்கான கணக்கரின் கட்டணம்
வருவாய் சான்றிதழை உறுதி செய்வதற்கான கணக்கரின் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு தொகை என வசூலிக்கப்படும். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு 100 முதல் 150 யூரோக்கள் வரை ஆகலாம்.
7. நில பத்திரப்பதிவு ஆதாரம்
நீங்கள் சொந்த வீட்டில் வசித்தால், அதற்கான ஆதாரமாக சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும். அதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 20 யூரோக்கள் ஆகும்.
8. பாஸ்போர்ட் புகைப்படங்கள்
குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் தங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும். நான்கு புகைப்படங்களுக்கான கட்டணம் 12 முதல் 15 யூரோக்கள்.
9. தபால் செலவு
உங்கள் ஆவணங்களை தபால் மூலம் அனுப்ப, தபால் செலவு, உதாரணமாக, 2 கிலோ எடையுள்ள ஒரு பார்சலுக்கு 5.49 யூரோக்கள் ஆகும்.
10. சட்டத்தரணிக்கான செலவு
குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு, உதாரணமாக, படிவங்களை நிரப்புதல் போன்ற வேலைகளுக்கு, சிலர் சட்டத்தரணி ஒருவரின் உதவியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உங்களுக்கு ஒரு சட்டத்தரணியின் உதவி தேவைப்பட்டால், குறைந்தபட்சம் நீங்கள் 650 யூரோக்கள் அதற்காக செலவிடவேண்டியிருக்கும். வேலையின் அளவைப் பொருத்து இந்தக் கட்டணம் அதிகரிக்கலாம். இதுபோக, அலுவலகங்களுக்குச் செல்வது போன்ற விடயங்களுக்காக போக்குவரத்து செலவும் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |