1 டன் ஏசியை 1 மணிநேரம் இயக்கினால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் தெரியுமா?
தற்போது கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எவ்வளவு செலவாகும்?
இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள்.
அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும்.

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர்
சிறிய வீட்டில் இருப்பவர்களுக்கு 1 டன் ஏசியே போதுமானது. இந்த 1 டன் ஏசியின் மின் நுகர்வானது ஏசியின் ஸ்டார் மதிப்பீட்டை பொறுத்து மாறுபடும்.
இதில், 1 ஸ்டார் ஏசிகளை விட 5 ஸ்டார் ஏசிகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. நீங்கள், ஏசியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதிக மின்சாரம் செலவாகும்.
1 டன் ஏர் கண்டிஷனர் 1 மணி நேரத்தில் 800 முதல் 1200 வாட்ஸ் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 1.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
1 டன் 5-ஸ்டார் ஏசியை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இயக்கினால், மாதத்திற்கு சுமார் 120 யூனிட் மின்சாரமும், 1 டன் 3-ஸ்டார் ஏசியை இயக்கினால் மாதத்திற்கு சுமார் 180 யூனிட் மின்சாரமும் செலவாகும்.
மின்சார பயன்பாட்டை குறைக்க உங்களது ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்துக் கொள்வது நல்லது. அதோடு, மின்விசிறியைப் பயன்படுத்துவதன் மூலம் அறையின் வெப்பநிலையைக் குறைக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |