30 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால்.., 20 வருடங்களுக்கு EMI எவ்வளவு?
இந்த வீட்டுக் கடனை வீடு வாங்கவும், கட்டவும் மட்டுமல்லாமல், வீட்டை பழுது பார்க்கவும் அல்லது எந்த வகை சொத்து வாங்கவும் பயன்படுத்தலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
இந்தியன் வங்கி
அந்தவகையில், இந்தியன் வங்கி (Indian Bank) கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்த வங்கியானது வீடு கட்டுவதற்கு அல்லது பிளாட் வாங்குவதற்கு வீட்டுக் கடனை வழங்குகிறது. மேலும், மற்ற வங்கிகளை விட இந்த வங்கியில் வட்டி விகிதம் (Interest rate) குறைவு. திருப்பிச் செலுத்தும் காலம் 30 ஆண்டுகள் ஆகும்.
இந்த வீட்டுக் கடனை வீடு வாங்கவும், கட்டவும் மட்டுமல்லாமல் , வீட்டை பழுது பார்க்கவும் அல்லது எந்த வகை சொத்து வாங்கவும் பயன்படுத்தலாம். ஆனால், இந்த கடனை பெறுவதற்கு நல்ல CIBIL மதிப்பெண் வேண்டும்.
அதோடு, கடன் தொகை, வட்டி விகிதம் வாடிக்கையாளரின் வருமானம், வயது போன்றவற்றையும் சார்ந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு வட்டி விகிதங்களில் சிறப்பு தள்ளுபடி உண்டு.
இந்த வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.40 சதவீதம் ஆகும். மேலும், இந்தியன் வங்கி ‘IB HOME ADVANTAGE’ திட்டத்தின் கீழ் Over Draft மற்றும் Balance பரிமாற்ற வசதிகளையும் வழங்குகிறது.
30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கு EMI?
உதாரணமாக ஒருவர் 20 வருடங்களுக்கு 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்தியன் வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.40 ஆகும்.
அவ்வாறு இருக்கும் போது 20 ஆண்டுகளுக்கு, ரூ.30 லட்சம் கடனுக்கு, மாதம் ரூ.25,845 EMI செலுத்த வேண்டும். அதாவது வட்டியாக ரூ.32,02,832 செலுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக அவர் ரூ. 62,02,800 கட்ட வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
* பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம்
* PAN card
* Aadhaar Card, Passport, Driving License
* Telephone Bill/ Electricity Bill
* 6 மாத Salary receipt
* 6 முதல் 12 மாத Bank statement
* 3 வருட Income tax return மற்றும் இருப்புநிலை அறிக்கை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |