நீடா அம்பானி அணிந்திருந்த சிம்பிளான ஆடை.., இதன் விலையே இவ்வளவா?
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரது ஆடை கவனத்தை பெற்றுள்ளது.
IOC உறுப்பினராக தேர்வு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics 2024) நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி நூறு சதவீதம் வாக்குகள் பெற்று ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நீடா அம்பானி பேசுகையில், "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக மீண்டும் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி" எனவும் தெரிவித்தார்.
ஆடையின் விலை
இந்த நிகழ்வின் போது நீடா அம்பானியின் ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ஆடையானது பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் பல வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நீலம் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த இந்த ஆடையில் இரண்டு பாக்கெட்டுகள் இருக்கிறது. அதோடு சிவப்பு நிறத்தில் கிளாசிக் பொத்தான்களும் உள்ளது.
நீடா அம்பானி அணிந்திருந்த இந்த நேர்த்தியான ஆடையின் விலை 6,891 AED ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1.57 லட்சம் ஆகும்.
மேலும், இந்த ஆடைக்கு பொருத்தமான கருப்பு நிற பேண்டை நீடா அம்பானி அணிந்திருந்தார். அதோடு, வைர கம்மல் மற்றும் ஒரு பெரிய மோதிரம் ஆகியவையும் அணிந்து வந்தது கவனத்தை ஈர்த்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |