ஜேர்மனிக்கு எவ்வளவு புலம்பெயர்ந்தோர் தேவை? நிபுணர் கூறும் தகவல்
திறன்மிகுப் பணியாளர்களை வரவேற்பதற்காக ஜேர்மனி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உண்மையில், ஜேர்மனிக்கு எவ்வளவு புலம்பெயர்ந்தோர் தேவை என்பது குறித்து நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கு எவ்வளவு புலம்பெயர்ந்தோர் தேவை?
281 மில்லியன் மக்கள், தாங்கள் பிறந்த நாடுகளில் இப்போது வாழவில்லையாம். அவர்கள் என்ன ஆனார்கள்?
அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டார்கள். அதிக அளவில் மக்கள் புலம்பெயர்வது அமெரிக்காவுக்காம். அதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் புலம்பெயரும் நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது ஜேர்மனியும் சவுதி அரேபியாவும்தான்.
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் தேவை
தற்போது, ஜேர்மன் பொருளாதார வல்லுநர்கள் ஜேர்மனிக்கு தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோர் தேவை என்கிறார்கள். அதிக அளவில் ஜேர்மானியர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள், இளைஞர்களோ குறைந்த அளவிலேயே தொழிலாளர் சந்தையில் நுழைகிறார்கள்.
ஆகவே, எல்லா துறைகளிலும் திறன்மிகுப் பணியாளர்களுக்கு தேவை நிலவுகிறது.
ஜேர்மனிக்கு, ஆண்டொன்றிற்கு 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோர் தேவை என்கிறார் பொருளாதார நிபுணரான Monika Schnitzer.
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் தேவைப்படுவதுடன், ஜேர்மனிக்கு வரும் புலம்பெயர்ந்தோர் ஜேர்மனியிலேயே தங்கிவிடவேண்டுமானால், அவர்கள் நல்ல முறையில் நடத்தப்படவேண்டும் என்னும் கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள் நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |