SBI Fixed Deposit -ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
எஸ்.பி.ஐ வங்கி Fixed Deposit -ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
Fixed Deposit முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குவதால் இந்தத் திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர்.
அந்தவகையில், எஸ்.பி.ஐ வங்கி Fixed Deposit -ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
SBI Fixed Deposit
SBI வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாக இருப்பதால் நல்ல வட்டி வழங்கப்படுகிறது.
தற்போது நாம் இந்த வங்கியில் FD திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் 30 மாதங்களில் எவ்வளவு முதிர்வு தொகையை பெறலாம் என்று பார்க்கலாம்.
SBI வங்கி 2 ஆண்டுகளுக்கு மேலான மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான வைப்பு தொகை திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டியையும் வழங்குகிறது.
SBI Fixed Deposit -ல் ரூ.3 லட்சத்தை 30 மாதங்களுக்கு Deposit செய்யும் போது ஆண்டுக்கு 7% வட்டி கிடைக்கும். அதன்படி, முதிர்வு தொகையாக ரூ.3,56,833 கிடைக்கும்.
அதேபோல, மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் 30 மாதங்களுக்கு ரூ.3 லட்சத்தை முதலீடு செய்யும் போது 7.50% வட்டி கிடைக்கும். அதன்படி, முதலீட்டாளருக்கு முதிர்வு தொகையாக ரூ.3,61,241 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |