நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த தொகை: எத்தனை கோடி தெரியுமா?
நயன்தாராவில் நடிப்பில் உருவான நயன்தாரா: Beyond the Fairy Tale என்ற ஆவணப்படம் 18ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
இதில் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த காட்சியை தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா முறையான அனுமதி இல்லாமல் பயன்படுத்தியிருக்கிறார்.
அந்த ஆவணப்படத்தின் டிரைலரை நெட்பிளிக்ஸ் வெளியிடவே அதனைப் பார்த்த தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த நயன்தாரா 3 பக்க நீளத்துக்கு இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
நயன்தாராவின் அறிக்கைக்கு தனுஷ் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
நயன்தாராவின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் அவரின் 40ஆவது பிறந்தநாளான 18ஆம் திகதி வெளியானது.
இந்நிலையில், அவர் நெட்பிளிக்ஸில் தன்னுடைய ஆவணப்படத்தை எத்தனை கோடிக்கு விற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நெட்பிளிக்ஸ் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு ரூ.25 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |