சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை.., எவ்வளவு தெரியுமா?
துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.
கடைசியாக தோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றது.
அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் தலைமையில் வென்றுள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை பற்றி பார்க்கலாம்.
அதன்படி, சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் 8 அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும்.
இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 60 கோடி ஆகும்.
ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 1.1 கோடி பரிசு வழங்கப்படும்.
ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 2.9 கோடி பரிசு வழங்கப்படும்.
இரண்டாம் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து அணிக்கு ரூ. 10 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.
அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ. 4.6 கோடி பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ. 20 கோடி பரிசு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |