மாநாடு நடைபெறும் இடத்திற்கு விஜய் எவ்வளவு வாடகை கொடுக்கிறார்? விவசாயி பகிர்ந்த தகவல்
தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாடு நடைபெறும் இடத்திற்கான வாடகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் மாநாடு
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஒக்டோபர் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இந்த அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டின் நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.
மாநாடு நடைபெறும் 80 ஏக்கர் மைதானத்தைச் சுற்றிலும் 20 உயரத்தில் கொடிகள் வரிசையாகப் பறக்கின்றன. இங்கு, ராட்சத கொடி கம்பத்தை நிறுவி அங்கு விஜய் கொடியேற்ற உள்ளார்.
இந்தக் கொடியை 5 ஆண்டுகளுக்கு அகற்றக் கூடாது என தவெக ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் என வாடகைக்குப் பேசி இடத்தை பெற்றுள்ளனர்.
இந்த விவசாயிகளில் ஒருவர் தான் ராதாகிருஷ்ணன். இவர், தனக்கு சரியான வருமானம் இல்லை என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விடயம் விஜயின் கவனத்திற்கு செல்லவே, அவருக்கு பசுவும் கன்றும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவர், 2 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்த 80 ஏக்கர் நிலத்தை தவிர 35 ஏக்கர் நிலம் பார்கிங் வசதிக்காக ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர், பார்க்கிங்கிற்கு மேலும் இடம் வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்ததால் 2 கிமீட்டர் தூரத்தில் 120 ஏக்கர் இடத்தை பார்கிங் வசதிகளுக்காகத் தயார் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |