மனைவி பெயரில் Post Officeல் ரூ.1 லட்சம் FD - 2 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
தபால் அலுவலக, FD திட்டத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை குறித்து பார்க்காலம்.
Post Officeல் ரூ.1 லட்சம் FD
முதலீடு செய்வதற்கு தங்கம் தொடங்கி பங்கு சந்தை, பிட்காயின் என பல்வேறு வாய்ப்புகள் இருந்தாலும், சிலவற்றில் ஆபத்துகளும் உள்ளன.

அதேவேளையில், அரசாங்க திட்டங்கள், வங்கி வைப்புத் திட்டங்கள் போன்றவை நிலையான வருமானத்தை தருகிறது.
இதில், நிலையான வைப்புத் திட்டங்கள்(FD) சிறந்த வட்டி விகிதங்களை வழங்குவதால், அதிகமாக மக்கள் அதில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக, மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.
தபால் அலுவலகங்களிலும், நிலையான வைப்புத் தொகைக்கு நல்ல வட்டி விகிதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தபால் அலுவலகம், 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்தை வழங்குகிறது.
இதில், உங்கள் மனைவி பெயரில், ரூ.1 லட்சம் FD திட்டத்தில் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தபால் அலுவலகங்கள், 2 வருட FD திட்டத்திற்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இதன்படி,உங்கள் மனைவி பெயரில், ரூ.1 லட்சம் FD திட்டத்தில் முதலீடு செய்தால், 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.14,888 வட்டியுடன் மொத்தம் ரூ.1,14,888 கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |