ஓணம் பம்பர் லாட்டரி.., கேரள அரசுக்கு கிடைத்த வருவாய் எத்தனை கோடி தெரியுமா?
How Much Revenue Did Kerala Earn From the Onam Bumper Lottery- கேரளாவில், இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.25 கோடியில் இருந்து, ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டது அதிக கவனத்தை ஈர்த்தது.
2026ஆம் ஆண்டுக்கான திருவோணம் பம்பர் லாட்டரியில் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அச்சிடப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதன் மூலம் மொத்தம் ரூ.450 கோடி விற்பனை வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசுத் தொகைக்காக ரூ.125.54 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.450 கோடி விற்பனை வருவாயில் இருந்து இந்த தொகை பரிசுகளாக வழங்கப்பட்டது.
மேலும், ரூ.500 மதிப்புள்ள ஒரு லாட்டரி டிக்கெட்டின் அடிப்படை விலை சுமார் ரூ.390.63 என கேரள லாட்டரி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை ஜிஎஸ்டியாகும். இதன்படி, ஜிஎஸ்டி தவிர்த்து 90 லட்சம் டிக்கெட்டுகள் மூலம் சுமார் ரூ.351.57 கோடி கிடைக்கிறது.
இதில் இருந்து பரிசுத் தொகையான ரூ.125.54 கோடியும், ஏஜென்ட் கமிஷனாக சுமார் ரூ.12.55 கோடியும் கழிக்கப்படுகிறது. இதன்படி சுமார் ரூ.213.48 கோடி மீதமிருக்கும்.

இதுமட்டுமின்றி, லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிடுதல், விநியோகம் செய்தல், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளும் உள்ளன.
இந்த ஆண்டு 90 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றதால் ரூ.450 கோடி விற்பனை வருவாய் கிடைத்துள்ளது.
பரிசுத் தொகை, ஏஜென்ட் கமிஷன், ஜிஎஸ்டி மற்றும் நிர்வாகச் செலவுகள் உள்ளிட்டவற்றைக் கழித்த பிறகும், கேரள அரசுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கக்கூடும் என கணக்கிடப்படுகிறது.
இதன் காரணமாகவே ஓணம் பம்பர் லாட்டரி, கேரள அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |