எவ்வளவு உப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்: மருத்துவர்கள் கூறும் அறிவுரை
உப்பை உணவில் அதிக அளவு எடுத்து கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன? எவ்வளவு உப்பு எடுத்து கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறும் அறிவுரை குறித்து இந்த குறிப்பில் பார்ப்போம்.
உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி, நம் உணவு பழக்கவழக்கத்தில் உப்புக் கொன்று தனி இடமே உண்டு.
உப்பிற்கு உணவின் சுவையை கூட்ட கூடிய பெரிய ஆற்றல் உள்ளது, ஆனால் இத்தகைய உப்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பல்வகை நோய் பாதிப்புகள் ஏற்பட அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உப்பு அதிகமாக உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோய்கள் ஏற்படலாம் என அமெரிக்காவின் டியூலேன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டியில் 10ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்புகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\
எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்
உப்பினை அதிகமாக எடுத்துக் கொண்டால் கிட்னி, இருதய பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை வரலாம் என மருத்துவர்கள் நேரடியாக எச்சரிக்க தொடங்கி விட்டனர்.
அத்துடன் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் பக்கவாதம், இருதய பிரச்சனை, இரத்த கசிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஒருவர் 5 முதல் 10 கிராம் உப்பை மட்டுமே சுவைக்காக பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ச
மையலில் TABLE SALT என்ற பெயருக்கு ஏற்றவாறு சிறிதளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |