யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது?
யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
YouTube Earning Tax
இன்றைய காலகட்டத்தில் யூடியூப் (YouTube) சேனலை நடத்துவது பெரிய வருமான ஆதாரமாக மாறிவிட்டது. இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் யூடியூப் சேனலை நடத்துகிறார்கள். இப்பணி மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுபவர்கள் ஏராளம்.
ஆனால், இந்த வருமானத்திற்கும் வரி கட்ட வேண்டும். நீங்கள் யூடியூப் மூலம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், அதற்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது, "பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்" அல்லது "வணிகம் மூலம் கிடைக்கும் வருமானம்" என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்தது இருக்கும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது வணிக வருமானமாகக் கருதப்படுகிறது. மேலும், வருமான வரிச் சட்டம் 1961 இன் விதிகள் அதற்குப் பொருந்தும்.
ரூ.1 கோடிக்கும் குறைவான வருமானம்
மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கும் குறைவாக இருந்தால், வரி செலுத்துவோர் வழக்கமான வரி நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். நிதி பதிவுகளை வைத்திருப்பது அவசியம். ஆனால் வரி தணிக்கை தேவையில்லை.
Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
ரூ.1 கோடிக்கும் அதிக வருமானம்
இதுவே மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால், பிரிவு 44AB இன் கீழ் வரி தணிக்கை செய்ய வேண்டியது கட்டாயமாகும். அத்தகைய சூழ்நிலையில் சேனல் உரிமையாளர் ஒரு பட்டய கணக்காளர் (chartered accountant) மூலம் தணிக்கை செய்ய வேண்டும்.
வணிகச் செலவுகள் மற்றும் தேய்மானத்தைக் கழித்த பிறகு நிகர வரிக்குரிய வருமானம் கணக்கிடப்படுகிறது.
YouTube -லிருந்து வரும் விளம்பர வருமானத்திற்கு 18% GST (9% CGST மற்றும் 9% SGST) பொருந்தும். இதற்காக யூடியூப் கிரியேட்டர்கள் ஜிஎஸ்டி பதிவைப் பெற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |