ஒரு சராசரி பிரித்தானியர் பணக்காரராக வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பணம் சேமிக்கவேண்டும்?
ஒரு சராசரி பிரித்தானியர் பணக்காரராக வேண்டுமானால் அவர் 52 ஆண்டுகள் பணம் சேமிக்கவேண்டும் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று!
சராசரி பிரித்தானியர் பணக்காரராக வேண்டுமானால்...
நடுத்தர வர்க்கத்தில் வாழும் ஒரு சராசரி பிரித்தானியர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக சேமித்தால் மட்டுமே 1.3 மில்லியன் பவுண்டுகள் சேமிக்க முடியும் என்கிறது Resolution Foundation என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வு.
இதற்கிடையில், பிரித்தானியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையிலான இடைவெளி இரட்டிப்பு கவலையை ஏற்படுத்தும் அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வமைப்பைச் சேர்ந்த பொருளாதாரவியல் நிபுணரான Molly Broome என்பவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில், ஒரு முழுநேரப் பணியாளர், தன் வாழ்நாள் முழுவதும் தான் வேலை செய்யும் காலகட்டத்தில் பெறும் ஊதியம் முழுவதையும் சேமித்தாலும், அவர் பணக்காரராக முடியாத அளவுக்கு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையிலான இடைவெளி காணப்படுவதாகவும் Molly தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |