60 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாஜ் ஹொட்டலின் ரூம் வாடகை எவ்வளவு?
மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே கடற்கரையில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹொட்டல், இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் மிகவும் பிரபலமானது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மும்பைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தாஜ் ஹொட்டலுக்கு முன்னால் புகைப்படம் எடுக்க விரும்புகின்றனர்.
மும்பையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த ஹொட்டல் பிரபலமானது.

இந்நிலையில், 1966ஆம் ஆண்டின் பழைய பில் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த பில்லின் படி, 1966 ஜனவரி 10 அன்று ஒரு அறையின் வாடகை ரூ.105 ஆக இருந்தது.
சேவை கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் சேர்த்து ரூ.116.70 ஆகியது. இறுதியாக மொத்த செலவு ரூ.127.70 ஆக இருந்தது.
இப்போது, அதே ஹொட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை சுமார் ரூ.34,000 முதல் தொடங்குகிறது.
1966ல் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.84 மட்டுமே இருந்தது. அதனால், அந்த காலத்திலும் ரூ.127 என்பது பெரிய தொகையாகவே கருதப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |