வெளிநாட்டவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கும் சுவிட்சர்லாந்து?
சுவிட்சர்லாந்தில், சுவிஸ் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட, வெளிநாட்டவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுவதாக சில சுவிஸ் புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டவர்களுக்கு குறைவான ஊதியம்
உதாரணமாக, சுவிஸ் குடிமக்கள் பெறும் சராசரி ஊதியம் மாதம் ஒன்றிற்கு 7,164 சுவிஸ் ஃப்ராங்குகள்.
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ, 6,089 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே. அதேபோல, C அனுமதி வைத்துள்ளவர்களுக்கு ஊதியம் 6,522 சுவிஸ் ஃப்ராங்குகள்.
எல்லை கடந்து பணிக்கு வரும் G அனுமதி வைத்துள்ளவர்களுக்கு ஊதியம் 6,251 சுவிஸ் ஃப்ராங்குகள்.
B அனுமதி வைத்துள்ளவர்களுக்கு ஊதியம் 5,841சுவிஸ் ஃப்ராங்குகள். L அனுமதி வைத்துள்ளவர்களுக்குத்தான் மிகவும் குறைந்த ஊதியம், 5,295சுவிஸ் ஃப்ராங்குகள்.
விடயம் என்னவென்றால், சில வேலைகளில் சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
அது, அவர்கள் வேலை செய்யும் துறை, கல்வித்தகுதி மற்றும் நாட்டின் எந்த பகுதியில் அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதைப் பொருத்து அமைகிறது.
உதாரணமாக, நடுத்தர மற்றும் உயர்நிலை நிர்வாகப் பணிகள் செய்வோரில், B அனுமதி வைத்துள்ளவர்களுக்குத்தான் அதிக ஊதியம், மாதம் ஒன்றிற்கு 12,791 சுவிஸ் ஃப்ராங்குகள்.
அவர்களுக்கு அடுத்தபடியாக, C அனுமதி வைத்துள்ளவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 11,495 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம்.
அதைத் தொடர்ந்து எல்லை கடந்து பணிக்கு வரும் G அனுமதி வைத்துள்ளவர்களுக்கு ஊதியம் 10,707 சுவிஸ் ஃப்ராங்குகள்.
இவர்கள் எல்லோருமே சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
ஆம், இந்த பிரிவுகளில் சுவிஸ் குடிமக்களின் ஊதியம், மாதம் ஒன்றிற்கு 10,476 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே!