பிக்பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் எப்படி இந்த தவறை செய்யலாம்? ஜேம்ஸ் வசந்தன் அதிருப்தி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள முத்துக்குமரன் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு
சமூக கருத்துக்களை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து வருவார். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள முத்துக்குமரன் குறித்து தனது முகநூல் பதிவில், "Bigg Boss நிகழ்ச்சியில் முத்துக்குமரன் என்றொரு போட்டியாளர்.
விஜய் தொலைக்காட்சியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் பேச்சாளராக வந்து அடையாளம் பெற்ற திறமைமிகு இளைஞன். இந்த வீட்டினுள் நடக்கிற பலவிதப் போட்டிகளிலும் மிகச் சாதுர்யமாக, கவனமாக, அறிவார்ந்து விளையாடி எல்லார் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருப்பவன்.
அந்த வீட்டுவாசிகள் எல்லாரும் தங்கள் பல்வேறு திறமைகளைக் காட்டிய ஒரு நிகழ்வில் இவன் கலைஞர் கருணாநிதி எழுதி, சிவாஜி கணேசன் பேசி நடித்த ஒரு காட்சியை அட்டகாசமாகப் பேசி அசத்தினான் என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டேன்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் கொஞ்சு தமிழில் பேசி கேட்போரைப் பரவசமடையச் செய்தான் என அறிந்தேன். அதற்கு பாராட்டு மழை இன்னமும் கொட்டிய வண்ணம் இருக்கிறது. நேற்று அந்தக் காட்சியை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்தார். பார்த்தேன்.
மக்கள் சொன்னது அனைத்தும் சரி. அடுத்தத் தலைமுறை தமிழை அறிந்துணர்ந்திருப்பது மெல்லத் தமிழினி மேலும் உயரும் என உணர்த்தியது. மகிழ்ந்தேன்! ஆனால், ஒரு அம்சம் என் மனதை உறுத்தியது. ஒன்றுதான்.. ஆனால் அது தமிழின் அடிப்படை.
எந்த மொழியின் அடிப்படையும் அதுதான். உச்சரிப்பு. இத்தனைப் பக்க உரையை துல்லியமாக மனப்பாடம் செய்து ஆணித்தரமான குரலில் அற்புதமாகச் சொல்லத் தெரிந்த அந்த இளைஞனுக்கு உச்சரிப்பு இவ்வளவு பிழையாக இருப்பது எப்படி தெரியாமல் போகிறது?
ல, ள, ழ, ன எழுத்துகள் அவன் பேசிய ஐந்து நிமிடங்கள் முழுவதும் தவறாகவே உச்சரிக்கப்பட்டன. இவ்வளவு தமிழ் தெரிந்த முத்துக்குமரன் எப்படி இந்தத் தவற்றைச் செய்யலாம்? உச்சரிப்புதானே மொழி?" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |